/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் வாலிபர் கைது
/
மாணவியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் வாலிபர் கைது
மாணவியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் வாலிபர் கைது
மாணவியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் வாலிபர் கைது
ADDED : மே 20, 2025 02:39 AM
பென்னாகரம், ஏரியூர் அருகே, பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே, 17 வயது மாணவி, 12ம் வகுப்பு முடித்து விட்டு, விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். கடந்த, 11ல் வீட்டில் பெற்றோர் இல்லாத போது, பட்டக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த நவீன்குமார், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவிக்கமால், அழுது கொண்டே இருந்துள்ளார். நேற்று முன்தினம் அம் மாணவி கழிவறைக்கும் பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட பெற்றோர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, மாணவி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகார் படி வழக்குப்பதிந்த போலீசார், நவீன்குமாரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.