/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி பெண் சாவு
/
கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி பெண் சாவு
ADDED : நவ 07, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி அடுத்த குமரிமடுவு
பகுதியை சேர்ந்தவர் சங்கர், 50, விவசாயி. இவரது மகள் பவதாரணி, 25. பி.இ., பட்டதாரி. இன்னும் திருமணமாகவில்லை.
நேற்று காலை, 9:00 மணியளவில், தன் விவசாய நிலத்தில் மாட்டுக்கு தட்டு அறுத்து போட சென்றவர், நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியபோது பவதாரணி அணிந்திருந்த செருப்பு அவர்களது கிணற்றில் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் பொம்மிடி போலீசார், கிணற்றில் இருந்து பவதாரணி உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

