/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அலுமினிய கம்பி திருடிய 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
/
அலுமினிய கம்பி திருடிய 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
ADDED : நவ 07, 2025 01:01 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ராமியணஅள்ளியில், தமிழ்நாடு மின்பகிர்மான கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வைக்கப்பட்டு இருந்த, 1.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் மின் அழுத்த அலுமினிய கம்பிகளை கடந்த, 3ல் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து, மின்வாரிய உதவி பொறியாளர் பாலசுப்ரமணி அளித்த புகார்படி கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அலுமினிய கம்பிகளை திருடியதாக, கடத்துார் அடுத்த வீரகவுண்டனுாரை சேர்ந்த சந்தோஷ்குமார், 29, தர்மபுரி குமாரசாமிபேட்டை சபரி, 27, காரிமங்கலம் மன்னன்கோட்டை லோகேஷ்குமார், 23, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

