/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.ஐ.ஆர்., பணியில் ஒரே இடத்தில் விண்ணப்பம் வழங்குவதாக புகார்
/
எஸ்.ஐ.ஆர்., பணியில் ஒரே இடத்தில் விண்ணப்பம் வழங்குவதாக புகார்
எஸ்.ஐ.ஆர்., பணியில் ஒரே இடத்தில் விண்ணப்பம் வழங்குவதாக புகார்
எஸ்.ஐ.ஆர்., பணியில் ஒரே இடத்தில் விண்ணப்பம் வழங்குவதாக புகார்
ADDED : நவ 07, 2025 01:01 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சதீஸ்யிடம், தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கும் பணி நடக்கிறது. பூர்த்தி செய்த படிவங்கள் அரசியல் கட்சிகளின் பி.எல்.ஏ., 2 (ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள்) மூலமாக அதிகபட்சம், 50 படிவங்கள் பெற்று வந்து வழங்கலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தெரிகிறது. பூர்த்தி செய்த படிவங்கள் அரசியல் கட்சிகளின் பி.எல்.ஏ.,2 மூலமாக பெற்றால், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும். இதற்கு தாங்கள் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பி.எல்.ஓ.,க்கள் தனித்தனியாக ஒவ்வொரு வாக்காளராக, ஒவ்வொரு வீடாக சென்று விண்ணப்ப படிவம் தர வேண்டும். ஆனால், இன்றைக்கு ஒரு சில இடங்களில் அலுவலர்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு, ஒட்டுமொத்தமான விண்ணப்பங்களை வழங்குவது குறித்து, கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். அதேபோல், அக்கம், பக்கத்திலிருக்கும் வீடுகளுக்கும் மொத்தமாக விண்ணப்பங்களை வழங்கி இருக்கிறார்கள். அதை பற்றியும் கூறியுள்ளோம். இனி, இது போன்று நடக்காதவாறு, என் நேரடி பார்வையில் சரி செய்வதாக, கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

