/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.6.96 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
/
ரூ.6.96 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
ADDED : மார் 12, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதி வார திங்-கட்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது.
நேற்று மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், நடந்த மஞ்சள் ஏலத்தில், அதிகபட்சமாக, ஒரு குவிண்டால் பனங்காலி மஞ்சள், 23,219 ரூபாய், விரலி, 12,079 ரூபாய், உருண்டை, 9,469 ரூபாய் என ஏலம் போனது. இதில், 22 விவசாயிகள், 116 மூட்-டைகளில் கொண்டு வந்திருந்த, 6,623 கிலோ மஞ்சள், 6.96 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது என, விற்பனை கூட கண்கா-ணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.