/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு
/
கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2011 11:47 PM
காரிமங்கலம் : காரிமங்கலம் அருகே தனியார் ஜூஸ் பேக்டரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாய நிலங்கள், கிணறுகள் பாதிப்படைந்து உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். சுமார் நூற்றுகணக்கான ஏக்கரில் நெல், கரும்பு போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. இப்பகுதியில் மா தொழிற்சாலைகள் உள்ளது. மா புட்ஸ் மற்றும் மாதவி ஆகிய பெயரில் மாங்கூழ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உறவினர்களால் நடத்தப்படும் மா புட்ஸ் நிறுவனம் தனது கழிவுநீரை போதிய ஏற்பாடின்றி வெளியேற்றுவதன் மூலம் விவசாய நிலங்கள் பாதிப்படைந்ததாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை சோதனை செய்து கழிவுநீரை வெளியேற்றுவது குறித்து கட்டுப்பாடுகள் விதித்தனர். இந்நிலையில், மீண்டும் மாங்கூழ் தொழிற்சாலை கழிவுநீரால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன்பு இப்பகுதியில் துவங்கப்பட்ட மாதவி மாங்கூழ் தொழிற்சாலை கழிவுநீரை சுத்தம் செய்யப்படாமல் வெளியேற்றுவதால் விவசாய நிலங்கள் பாதிப்படைகிறது. மேலும் மாங்கூழ் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கெமிக்கல் அடங்கி மாங்கொட்டைகளை காய வைப்பதாலும் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாய கிணறுகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறி நீல நிறமாக மாறிவிட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் உள்ள நீர் நிறம் மாறியதாலும் கழிவுநீரால் விவசாய நிலங்களும் மா, தென்னை மரங்கள் பட்டு போனதை அடுத்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவசர கதியில் துவங்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றுவதை கண்டு கொள்ளாத தொழிற்சாலைகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

