ADDED : ஜன 17, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொடர் பனியால் விவசாயிகள் அவதி
தர்மபுரி, :தர்மபுரி மாவட்டத்தில், மார்கழி மற்றும் தை மாதத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவது வழக்கம். தை மாதம் கடந்த, 14ல் துவங்கிய நிலையில், மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், கிராமம் மற்றும் நகர் பகுதியில் வசிக்கும் மக்களும், கடும் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளனர். பொங்கல் பண்டிகையில், வீட்டு வாசலில் கோலமிடவும் கடும் பனியால் தயங்கி வருகின்றனர். வயல் வேலைகளுக்கு செல்லும் விவசாயிகள், இந்த கடும் பனிப்பொழிவால் அவதிப்பட்டு வருகின்றனர்.