/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ADDED : பிப் 07, 2025 01:17 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சிறப்பு முகாம் அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் வரவேற்றார். முகாமில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய, 55 பள்ளி குழந்தைகள் பங்கு பெற்றனர். இவர்களுக்கு டாக்டர்கள் பரி சோதனை செய்தனர்.
இதில், மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, இலவசபஸ் பாஸ், வீல் சேர் வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர்கள் கற்பகம், விமலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார சிறப்பு பயிற்றுனர் ராஜா நன்றி கூறினார்.

