ADDED : பிப் 18, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் மோதி தொழிலாளி பலி
பெரும்பாலை:தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெத்தானுாரை சேர்ந்தவர்கள் ராதா, 53, மற்றும் லட்சுமி, 50. இருவரும் அருகே உள்ள கிராமத்திற்கு கூலி வேலைக்காக நேற்று, காலை 7:30 மணியளிவில், பென்னாகரம் செல்லும் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது, சின்னம்பள்ளியிலிருந்து மேச்சேரி நோக்கி வந்த ஹோண்டா யூனிகான் பைக், இவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே ராதா பலியானார். லட்சுமி படுகாயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரும்பாலை போலீசார், விபத்தை ஏற்படுத்திய பைக்கை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

