/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்மாற்றியை மாற்ற விவசாயிகள் போராட்டம்
/
மின்மாற்றியை மாற்ற விவசாயிகள் போராட்டம்
ADDED : பிப் 19, 2025 01:15 AM
மின்மாற்றியை மாற்ற விவசாயிகள் போராட்டம்
கடத்துார், டத்துார் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி, அய்யம்பட்டி, நான்கு ரோட்டில், 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் கிணற்று பாசனத்தை நம்பி உள்ளனர். இதற்காக மின் இணைப்பு பெற்றுள்ளனர்.
இந்த விவசாய கிணறுகளுக்கு மின்சப்ளை வழங்க, நான்கு ரோடு பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால், அடிக்கடி பழுதாகி மின்தடை ஏற்படுகிறது.
இதுகுறித்து பொம்மிடி மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தால், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால், ஒவ்வொரு முறையும் தனி நபர்களுக்கு பணம் கொடுத்து மின்
தடையை சரிசெய்ய வேண்டி உள்ளது என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த மின்தடையால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல், கால்நடைகளுக்கு குடிநீர் வழங்க முடியாமல், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, உடனடியாக மின்மாற்றியை மாற்ற வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், மின்மாற்றி முன்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

