/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கியவர் சடலமாக மீட்பு
/
ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கியவர் சடலமாக மீட்பு
ADDED : பிப் 23, 2025 01:57 AM
ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கியவர் சடலமாக மீட்பு
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்த தேவர்ஊத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், சமீபத்தில் இறந்த மூதாட்டிக்கு திதி கொடுக்க கடந்த, 20ல், வேனில் ஒகேனக்கல் வந்தனர். அங்கு எம்.எஸ்சி., பட்டதாரி வாலிபர் விக்னேஷ், 21, தன் தாத்தா ராஜேந்திரன், 55, என்பவருடன் சேர்ந்து, ஒகேனக்கல் ஏத்து
மடுவு பகுதியில் திதி கொடுத்து விட்டு, ஆற்றில் குளித்துள்ளார். இருவரும் ஆற்றை கடந்து மறு கரைக்கு செல்ல முற்படும் போது, ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். ராஜேந்திரனை உறவினர்கள் மீட்டனர். விக்னேஷ் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பரிசல் ஒட்டி
களின் உதவியோடு ஆற்றில் தேடி வந்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு பின் அதே பகுதியில் விக்னேஷ் சடலமாக நேற்று மீட்கப்பட்டார். ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.