ADDED : பிப் 23, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
அரூர்: அரூர் அடுத்த கம்மாளம்பட்டியை சேர்ந்தவர் தனபால், 35, டிராக்டர் டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு அப்பகுதியிலுள்ள தண்டபாணி என்பவரது வயலில் உழவு செய்து விட்டு, அடுத்த வயலுக்கு டிராக்டரை ஓட்டி சென்றபோது டிராக்டர், தலைகீழாக கவிழ்ந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கிய தனபால் படுகாயம் அடைந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனபால் அங்கு உயிரிழந்தார். புகார்படி அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

