/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : பிப் 26, 2025 01:16 AM
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, கீழ்பூரிக்கல்லில் உள்ள பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, பிரதோஷத்தையொட்டி பால், இளநீர், சந்தனம், தேன், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவனேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் அபிதகுஜாம்பாள் ஆருண்ணேஸ்வரர், அதியமான்கோட்டை சோமேஷ்வரர், தர்மபுரி டவுன் ஆத்துமேடு சர்வாங்கசுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர், அரசநாதர், லளிகம் மல்லிகார்ஜூன ஈஸ்வரர், பி.எஸ்.அக்ரஹாரம் மரகதாம்பிகா சமேத ஸ்ரீமார்க சகாய ஈஸ்வரன், கொளகத்துார் புற்றிடங்கொண்ட நாதர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள, பல்வேறு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.