ADDED : மார் 03, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலவச கண் பரிசோதனை முகாம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கண்ணொளி திட்டத்தில், மலைவாழ் மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில், 15 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முகாமில், கண் தானம், கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற கண் மருத்துவ உதவியாளர் கலையரசன், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.