/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
/
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
ADDED : மார் 06, 2025 01:19 AM
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி:இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் கடை
பிடிக்கப்படுகிறது.இந்நாளிலிருந்து புனித வெள்ளி வரை, 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் அசைவு உணவை தவிர்ப்பர். விரதம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடனில் ஈடுபடுவர்.
நேற்று பி.பள்ளிப்பட்டி லுார்து புரம் புனித அன்னை தேவாலயத்தில், நேற்று திருநீற்று புதனையொட்டி, அருள்ஜோதி, சுரேஷ் ஆகியோர் இறை மக்களுக்கு குருத்தோலை சாம்பலை நெற்றியில் இட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.
* தர்மபுரி துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் நடந்தது.இதில், தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை இயக்குனர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை இயேசு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.