ADDED : மார் 09, 2025 01:58 AM
மனித சங்கிலி இயக்கம்
தர்மபுரி:சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், மனித சங்கிலி இயக்கம் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் தெய்வானை, பொருளாளர் அன்பழகன், நிர்வாகிகள் சங்கர், முருகன் ஆகியோர் பேசினர்.
சர்வதேச மகளிர் தினமான மார்ச், -8ஐ விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் விஷாகா கமிட்டி அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் சிறப்பு அனுமதி விடுப்பு வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சட்டங்கள் இயற்ற வேண்டும். விடுமுறை நாட்களில் ஆய்வுகூட்டம் நடத்த கூடாது. படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.