/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பால் விலையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்
/
பால் விலையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 19, 2025 01:37 AM
பால் விலையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், ஒரு லிட்டர் பாலுக்கு, 45 ரூபாயாக உயர்த்தக்கோரி, வட்டார தலைவர் பொன்னுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் மனோகரன், சேகர், சென்னகிருஷ்ணன், மாதையன், செல்வம் முன்னிலை வகித்தனர். சாமிக்கண்ணு வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி, விவசாய சங்க வட்ட செயலாளர் வஞ்சி, மா.கம்யூ., கட்சி வட்ட செயலாளர் தனுஷின் ஆகியோர் பேசினர். இதில் பாலுக்கு, ஒரு லிட்டர், 45 ரூபாயாக உயர்த்த வேண்டும். பாலுக்கான தொகை, ஊக்கத்தொகையையும் நிலுவையில்லாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும். 50 சதவீதம் மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களிலேயே பாலின சத்துக்கள், அளவு குறித்து கொடுக்க வேண்டும். ஆவின் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்து, செலவினங்களை குறைக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மெணசி, பூதநத்தம், குண்டல்மடுவு உட்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், விவசாயிகள் வையாபுரி, தனபால் சாமிக்கண்ணு நல்லதம்பி, கவியரசன், ஜெகன், தமிழ்மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழனி நன்றி கூறினார்.