/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில்ரமலான் நோன்பு கொண்டாட்டம்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில்ரமலான் நோன்பு கொண்டாட்டம்
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில்ரமலான் நோன்பு கொண்டாட்டம்
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில்ரமலான் நோன்பு கொண்டாட்டம்
ADDED : மார் 28, 2025 01:22 AM
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில்ரமலான் நோன்பு கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி, ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளியில், நேற்று ரமலான் நோன்பு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், குர் ஆன் வாசிப்புடன் இறை வணக்கம் செலுத்தி, மாணவர்கள் இஸ்லாமிய பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம் ரமலானின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர். பள்ளி நிறுவனர் டாக்டர் அன்பரசன், 'அனைத்து மதங்களுக்கும் இடையே ஒற்றுமையை வளர்ப்பதே, நம் கல்வி நிறுவனத்தின் நோக்கம். ரமலான், தியாகம், பொறுமை மற்றும் அன்பை போதிக்கும் புனித மாதமாகும். ஆன்மிக சூழலை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
தாளாளர் சங்கீதா அன்பரசன், 'மாணவர்களுக்கு பல மத, பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், பரஸ்பர மதிப்பை வளர்க்கிறோம்' என்றார். பள்ளி மேலாளர் பூபேஷ், அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர் ஷர்மிளா, மெட்ரிக் பள்ளி முதல்வர் ரமணன் ஆகியோர் நன்றி கூறினர். இதில், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.