/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆபத்தான நிலையில் மரம்வெட்டி அகற்ற கோரிக்கை
/
ஆபத்தான நிலையில் மரம்வெட்டி அகற்ற கோரிக்கை
ADDED : ஏப் 01, 2025 01:37 AM
ஆபத்தான நிலையில் மரம்வெட்டி அகற்ற கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு போயர் தெருவில், 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இப்பகுதியில் பழமையான புளிய மரம் உள்ளது. இந்த மரம் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. மழை, காற்று அடிக்கும் நேரத்தில் வீடுகளின் மேல் மரம் சாயும் அபாய நிலை உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் வீட்டில் அச்சத்துடன் வசிக்கின்றனர். இந்த மரத்தை அகற்ற பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் உள்ளனர். எனவே, இந்த பழமையான புளிய மரத்தை அகற்ற, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.