/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை வழங்கபால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
/
நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை வழங்கபால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை வழங்கபால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை வழங்கபால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 05, 2025 01:41 AM
நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை வழங்கபால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
அரூர்:ஆவினில் நிலுவையிலுள்ள, நான்கு மாத ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், 352 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பசும்பால், 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றன. இதனிடையே, பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்தாண்டு, நவம்பர் முதல் லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் கடந்த டிச., முதல், மார்ச் வரை நான்கு மாதங்களுக்கான ஊக்கத்தொகை வரவு வைக்கப்படவில்லை. அதே போல் கடந்தாண்டு, நவ., 8ல், தர்மபுரி மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டது. இதில், முறையாக பால் பணம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, ஆவினில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு பால் கொள்முதல் விலையை உயர்த்துவதுடன், முறையாக பால் பணம் பட்டுவாடா மற்றும் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.