/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஏப் 05, 2025 01:41 AM
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம், கமலநத்தம் அருகே, எருமைபட்டி கொட்டாய் கிராமத்தில், சக்தி விநாயகர், பாலமுருகன், சக்தி மாரியம்மன், ஓம் சக்தி மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த மார்ச், 27- அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
நேற்று காலை யாகசாலையில் இருந்து, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சக்தி விநாயகர், பாலமுருகன், சக்தி மாரியம்மன், ஓம்சக்தி மாரியம்மன் கோவில், விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
இதில், எருமைபட்டிக்கொட்டாய், ஜருகு, கமலநத்தம், சாமிசெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.