/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்
/
சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்
சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்
சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்
ADDED : ஏப் 06, 2025 01:21 AM
சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., 10வது வார்டுக்கு உட்பட்ட, தில்லை நகர் சென்னையன் தோட்டத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக துார்வாரப்படாததால், கழிவுகள் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டெங்கு, மலேரியா
உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் இணைப்புகளுடன் இணைக்கப்பட்ட குழாய் வழியாக வீட்டில் உள்ள கழிப்பறைக்கு புழுக்கள் மற்றும் சிறு, சிறு பாம்பு குட்டிகள் படையெடுக்
கின்றன. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீதியடைகின்றனர். கால்வாயை துார்வாரக்கோரி, டவுன் பஞ்., அதிகாரிகளிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.