/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
/
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ADDED : ஏப் 09, 2025 01:23 AM
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
அரூர்:தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி ஒன்றிய, நகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், அரூரில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார்.
மசோதாக்கள் ஒப்புதல் அளிப்பது குறித்து கவர்னர் ஒரு மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழக கவர்னரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை வரவேற்று அரூர் பஸ் ஸ்டாண்டில், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் தலைமையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

