/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மகள் சாவில் சந்தேகம்போலீசில் தாய் புகார்
/
மகள் சாவில் சந்தேகம்போலீசில் தாய் புகார்
ADDED : ஏப் 11, 2025 01:39 AM
மகள் சாவில் சந்தேகம்போலீசில் தாய் புகார்
அரூர்:அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி ஜெயசுதா, 36. தம்பதிக்கு, 5 வயதில், 2 மகன்கள் உள்ளனர். ஜெயசுதா, இலக்கம்பட்டியிலுள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனால், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு ஜெயசுதா வந்துள்ளார். தொடர்ந்து, இரவு பிரகாஷ் வாங்கி வந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பின், 11:30 மணிக்கு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, பிரகாஷ், ஜெயசுதாவை தாக்கியுள்ளார். தொடர்ந்து, ஜெயசுதா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, ஜெயசுதாவின் தாய் புகார் படி, அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.