/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய திறனாய்வு தேர்வில்மாணவ, மாணவியர் சாதனை
/
தேசிய திறனாய்வு தேர்வில்மாணவ, மாணவியர் சாதனை
ADDED : ஏப் 16, 2025 01:18 AM
தேசிய திறனாய்வு தேர்வில்மாணவ, மாணவியர் சாதனை
அரூர்:அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும், என்.எம்.எம்.எஸ்., என்றழைக்கப்படும், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் வரை, 48 மாதங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். கடந்த மாதம் நடந்த தேர்வில், தர்மபுரி மாவட்டத்தில், ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், அரூர் அடுத்த ராயப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், கனிஷ்கா, நிதீஷ், வர்ஷினி, மெய்ஹரி, பத்ருஹரி, இஷானி, நகுலன், வசிகரன் உள்பட, 9 பேர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களை, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதேபோல், கூக்கடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், 5 பேர் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.