/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடியிருப்பு பகுதிகளில் தேங்கும்கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
/
குடியிருப்பு பகுதிகளில் தேங்கும்கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
குடியிருப்பு பகுதிகளில் தேங்கும்கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
குடியிருப்பு பகுதிகளில் தேங்கும்கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
ADDED : ஏப் 18, 2025 01:31 AM
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அதிகாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகரில் கழிவு நீர் கால்வாய் வசதிகள் இல்லை. பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் அம்மன் நகரில் தேங்குகிறது. கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் அமைக்கப்படாமல் கழிவுநீர் முழுமையாக வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இந்நிலையில் வாணியாறு அணையிலிருந்து வலதுபுற கால்வாய் வழியாக பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரும், கழிவுநீரும் புகாதவாறு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.