sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டட மேஸ்திரி கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டட மேஸ்திரி கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டட மேஸ்திரி கொலை


ADDED : மே 20, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 02:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாப்பாரப்பட்டி, பாப்பாரப்பட்டி அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டட மேஸ்திரியை வெட்டிக்கொன்ற -டிரைவர் போலீசில் சரணடைந்தார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நஞ்சப்பன், 40. கட்டட மேஸ்திரி. இவர் மனைவி மஞ்சு. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கிறார்.

இந்நிலையில், பிக்கம்பட்டி அடுத்த ஓனாம்பள்ளத்தை சேர்ந்த டிரைவர் கஜேந்திரன், 38, என்பவருக்கும் மஞ்சுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கஜேந்திரனிடம், நஞ்சப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். அதுபோல் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு ஓனாம்பள்ளத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கஜேந்திரன், அரிவாளால் நஞ்சப்பனை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் நஞ்சப்பன் பலியானார்.

பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடம் சென்று நஞ்சப்பன் உடலை மீட்டு விசாரித்தனர். இதற்கிடையே கஜேந்திரன் அன்றிரவு, 10:00 மணிக்கு வெட்டிய அரிவாளுடன் பாப்பாரப்பட்டி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us