/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு
/
விவசாயி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு
ADDED : மார் 06, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியை சேர்ந்த சிவன் மனைவி பிரியா, 35, விவசாயி; இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு உப்பாரப்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். மதியம், 2:40 மணிக்கு வீடு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் பிரியாவிற்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். பிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 2 பவுன் நகை மற்றும் காஸ் சிலிண்டரை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. பிரியா புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.