/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பையாறு அணையிலிருந்து மார்ச் 3ல் பாசனத்திற்கு நீர் திறப்பு
/
தொப்பையாறு அணையிலிருந்து மார்ச் 3ல் பாசனத்திற்கு நீர் திறப்பு
தொப்பையாறு அணையிலிருந்து மார்ச் 3ல் பாசனத்திற்கு நீர் திறப்பு
தொப்பையாறு அணையிலிருந்து மார்ச் 3ல் பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : பிப் 01, 2025 12:43 AM
தொப்பையாறு அணையிலிருந்து மார்ச் 3ல் பாசனத்திற்கு நீர் திறப்பு
தொப்பூர்,: 'தொப்பையாறு அணையில் இருந்து, மார்ச், 3ல் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்' என, உதவி பொறியாளர் மோகனபிரியா தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள தொப்பையாறு அணை, 50 அடி உயரம், 298.6 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. ஏற்காடு மலை மற்றும் பொம்மிடி, ஊத்துபள்ளம் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து, வேப்பாடி ஆற்றின் மூலம், தொப்பையாறு அணைக்கு நீர்வருகிறது. கடந்த ஆண்டு புயலால் பெய்த கன மழை காரணமாக, டிச., 2 அன்று ஒரே இரவில் அணை முழுகொள்ளளவை எட்டியதால் தொடர்ந்து, 20 நாட்களுக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டது.
தொப்பையாறு அணையின் வலதுபுற கால்வாய், 17 கி.மீ., மற்றும் இடது புற கால்வாய், 24 கி.மீ., நீளம் கொண்டது. இதன் மூலம், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் செக்காரபட்டி, தொப்பூர், கம்மம்பட்டி, வெள்ளார், தெத்திகிரிபட்டி, மல்லிகுந்தம் உள்ளிட்ட, 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,330 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் திறப்பு மற்றும் நீர் தேவை குறித்து, விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர். நேற்றைய நிலவரப்படி, தொப்பையாறு அணையில், 49.8 அடி உயரம், 294 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில், அணைக்கு வினாடிக்கு, 15 கனஅடி நீர் வரத்தும் மற்றும் அதே அளவு நீர் வெளியேற்றபட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மார்ச், 3ல் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என, உதவி பொறியாளர் மோகனபிரியா தெரிவித்தார்.