/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுகாதாரமற்ற கடைகளுக்கு ரூ.3,500 அபராதம்
/
சுகாதாரமற்ற கடைகளுக்கு ரூ.3,500 அபராதம்
ADDED : ஆக 25, 2024 01:30 AM
சுகாதாரமற்ற கடைகளுக்கு
ரூ.3,500 அபராதம்
பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 25-
தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த ராமியணஹள்ளியில், புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் படி, வட்டார மருத்துவ அலுவலர் அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் மளிகை, பேக்கரி, ஓட்டல் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற, விளம்பர வாசக பலகை, கடையின் முன் வைக்க, கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஓட்டல், மளிகை, பேக்கரி உள்ளிட்ட, 7 கடைகளுக்கு மொத்தம், 3,500 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

