/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்ரூ.62.97 லட்சம் நலத்திட்ட உதவிகள்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்ரூ.62.97 லட்சம் நலத்திட்ட உதவிகள்
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்ரூ.62.97 லட்சம் நலத்திட்ட உதவிகள்
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்ரூ.62.97 லட்சம் நலத்திட்ட உதவிகள்
ADDED : பிப் 20, 2025 01:38 AM
தர்மபுரி:தர்மபுரியில், 'மக்களுடன் முதல்வர்' 3ம் கட்ட திட்ட சிறப்பு முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்து, 208 பயனாளிகளுக்கு, 62.97 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் பஞ்.,ல் பழைய இண்டூர், பாலவாடி பஞ்.,ல் அரசு மேல்நிலைப்பள்ளி, அதியமான்கோட்டை பஞ்.,ல் அவ்வை காலனி தொடக்கப்பள்ளி, நல்லம்பள்ளி பஞ்., அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி ஒன்றியத்தில், இலக்கியம்பட்டி பஞ்., நியூ காலனி என, 5 இடங்களில், 'மக்களுடன் முதல்வர்' 3ம் கட்ட திட்ட சிறப்பு முகாம்களை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் தலைமை வகித்தார்.
இதில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் கோவி.செழியன், 208 பயனாளிகளுக்கு, 62.97 லட்சம் ரூபாய் மதிப்பிலான, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ''தர்மபுரி மாவட்டத்தில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், முதல் கட்டமாக நகர பகுதிகளில், 2023 டிச., 18 முதல், 2024 ஜன., 6 வரை நடந்த, 17 முகாம்களில் பெறப்பட்ட, 13,942 மனுக்கள், 2வது கட்டமாக ஊரக பகுதிகளில், 2024 ஜூலை, 11 முதல், 2024 ஆக., 18 வரை நடந்த, 70 முகாம்களில், 48,057 மனுக்கள் மீது பரிசீலனை செய்து, தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முகாம்களில் கோரிக்கை மனு வழங்கிய, 1,554 பயனாளிகளுக்கு, 9.22 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதில், மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா

