/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
/
டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஆக 31, 2024 12:53 AM
அரூர்: அரூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அனுமன்தீர்த்தம்-தீர்த்தமலை சாலையில், சந்திராவரம் பிரிவு ரோட்டில் கடந்த, 28ல் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதன் அருகிலேயே அரசு, தனியார் பள்ளி மற்றும்
கல்லுாரி உள்ளன. டாஸ்மாக் கடையை கடந்துதான் பள்ளி மாணவ, மாணவியர் வரவேண்டும். டாஸ்மாக்கில் மது வாங்கி குடிக்கும் குடிமகன்களால் மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் நிலையுள்ளது. எனவே, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், இல்லையெனில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தப்படும் என மத்தியம்பட்டி மற்றும் மாம்பட்டி பஞ்., பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.