/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 26, 2024 08:28 AM
கிருஷ்ணகிரி: த.மா.கா., ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடந்தது. பழனிக்குமார் வரவேற்றார். கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், மேற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் தசரதன், உறுப்பினர் படிவங்களை வெளியிட, மாநில செயற்குழு உறுப்பினர் அரங்கநாதன் பெற்றுக் கொண்டார்.
மாநில பொதுச் செயலாளர் குலோத்துங்கன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சத்திய நாராயணன், கணேஷ் பாபு, சிறப்பு அழைப்பாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், அனைத்து பஞ்சாயத்துகளிலும் அதிகளவில் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். நகர, வட்டார அளவில் கட்சி கொடியை ஏற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.