/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
ADDED : மார் 02, 2025 07:00 AM
தர்மபுரி: வரத்து அதிகரித்துள்ள நிலையில், போதுமான விலை கிடைக்கா-ததால், தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசா-யிகள் கவலையில் உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம், பஞ்சப்-பள்ளி, மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில், தக்காளி அதிக-ளவு பயிரிடப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிக-ரித்து, வரத்து அதிகரித்துள்ளதால் தர்மபுரி மாவட்ட உழவர் சந்-தைகளில் விலை சரிந்து வருகிறது. இது, தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. விலை குறைவு காரண-மாக, தக்காளிகளை ரோட்டோரத்தில் வீசி செல்வதும், விளை நிலத்திலேயே கொட்டி அழிப்பதுமான செயல்களில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த, 22 அன்று ஒரு கிலோ, 14 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் நேற்று, 10 ரூபாய்க்கு விற்-பனையானது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உழவர் சந்-தையில் இருந்து கோயம்பேடு, மதுரை, திண்டுக்கல் போன்ற பகு-திகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில், 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி, 120 முதல், 140 ரூபாய் வரை விற்பனையானது. மேலும், தொடர்ந்து விலை சரியும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.