/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவிலுக்கு மாணவர்கள் ஆன்மிக களப்பயணம்
/
கோவிலுக்கு மாணவர்கள் ஆன்மிக களப்பயணம்
ADDED : பிப் 17, 2024 12:27 PM
தர்மபுரி: தர்மபுரி, கோட்டை கோவிலுக்கு பள்ளி மாணவர்கள் ஆன்மிக களப் பயணம் வந்து, சிற்பங்களை கண்டுகளித்தனர்.
தர்மபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியில், தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நிர்வாகம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலுக்கு, மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு, கோவில் கோபுரம், அதிலுள்ள சிற்பங்கள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் வசந்தி, விக்னேஸ்வரி, நதியா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, அருகில் இருந்த கோட்டை பரவாசுதேவர் பெருமாள் கோவிலுக்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிற்பங்களை கண்டுகளித்தனர்.