/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
/
கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED : பிப் 19, 2024 10:29 AM
இண்டூர்: அதகப்பாடியில், கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற தீர்த்தக்குடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த அதகப்பாடியில், பொடாரியம்மன்-, இருசாரம்மன், செல்வவிநாயகர் கோவில் பணிகள் முடிந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா கடந்த, 11- அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று, பக்தர்கள் ஒன்று கூடி தீர்த்தக்குடம், பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், ஆட்டுக்காரம்பட்டி ராதேகிருஷ்ணன் கோவில் முன் தொடங்கி கோவிலை வந்தடைந்தது. பின்னர், சுவாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் வரும், பிப்., 21- அன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்திருந்தனர்.
* பென்னாகரம் அடுத்த போடூர் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான நடுகல் வீரகாலு சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடக்கவுள்ளது. இதையொட்டி நேற்று காலை, மடம் கிராமத்திலிருந்து, பக்தர்களின் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

