/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மயானக்கொள்ளையையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
/
மயானக்கொள்ளையையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED : மார் 10, 2024 03:52 AM
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேற்று பால் குடம் எடுத்து வந்தனர்.
குமாரசாமிப்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை பெருவிழாவை முன்னிட்டு, கடந்த, 6ல், கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. பின், சக்தி கரகம் அழைத்தல் அம்மன் வீதி உலா நடந்து. 7ல், காலை சக்தி கரக ஊர்வலமும் அதை தொடர்ந்து குண்ட பூஜையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல், கங்கை பூஜை நடந்தது. நேற்று திரளான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
பின், அம்மனுக்கு பாலபிேஷகம் நடந்தது. இரவு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இன்று காலை பக்தர்களுக்கு அலகு போடுதல், பகலில் மயானக்கொள்ளை பெருவிழா நடக்கிறது. நாளை, பல்லக்கு உற்சவமும், நாளை மறுநாள் பிள்ளைப்பாவு ஊர்வலம், கும்பபூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. விழாவின் அத்தனை நாட்களும், அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடத்தப்படுகிறது.

