ADDED : ஆக 12, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, 9:30 முதல், நேற்று காலை, 6:30 மணி வரை அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டப்பட்டியில், 90 மி.மீ., அரூர், 27.20 மி.மீ., தீர்த்தமலை, 34 மி.மீ., என மழை பெய்தது. தொடர்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.