நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீப்பற்றிய கார்
தர்மபுரி, நவ. 12-
தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே, நஞ்சப்பா கவுண்டர் தெருவை சேர்ந்த சீதாபதி, 67. இவர் அவருடைய ஹூண்டாய் காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்று மதியம் வெளியே செல்ல, காரை ஸ்டார்ட் செய்தபோது, திடீரென தீப்பிடித்தது. சீதாபதி காரிலிருந்து வெளியேறினார். தீயணைப்பு துறையினர் வருவதற்குள், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

