ADDED : ஜன 24, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்., கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி,:மத்திய, பா.ஜ., அரசை கண்டித்து, தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மாவட்ட, காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வடிவேல் முன்னிலை வகித்தனர்.
இதில், எதிர்கட்சி தலைவர் ராகுல் மீது, பொய் வழக்கு பதிவு செய்த பா.ஜ., அரசை கண்டிக்கிறோம். அம்பானி, அதானி நிறுவனங்களுக்கு உறுதுணையாக, பா.ஜ., செயல்படுவதை கண்டிக்கிறோம், என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

