ADDED : ஜன 30, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாஸ்டல் வார்டன் 'சஸ்பெண்ட்'
தர்மபுரி :தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகாவில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காரிமங்கலம் பள்ளி மாணவர்களுக்கான, மிகவும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், ஹாஸ்டல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கம்பைநல்லுாரில் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான, ஹாஸ்டல் வார்டன் மாதையன் காரிமங்கலம் ஹாஸ்டலுக்கு கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று கலெக்டர் ஆய்வின்போது, ஹாஸ்டல் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. இதில், வார்டன் மாதையனை 'சஸ்பெண்ட்' செய்து, கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.