ADDED : பிப் 09, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி :தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், மத்திய பட்ஜெட்டை கண்டித்து, கண்டன பொதுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், நெப்போலியன், பேரூர் செயலாளர் கவுதமன், பேரூராட்சி தலைவர்கள் மாரி, சாந்தி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் வரவேற்றார். கூட்டத்தில், தி.மு.க., சட்டத்துறை செயலாளர் இளங்கோ எம்.பி., மற்றும் தலைமை நிலைய பேச்சாளர் தாவூத் அபுபக்கர் உள்ளிட்டோர் பேசினர்.