ADDED : பிப் 13, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய பயிற்சி பட்டறை
தர்மபுரி:தர்மபுரி அடுத்த பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பாக, 2 நாள் தேசிய பயிற்சி பட்டறை, இந்திய நிறமாலை இயற்பியல் சங்கத்துடன் இணைந்து, 'மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்' என்ற தலைப்பில் நடந்தது. முன்னதாக, இயற்பியல் துறை தலைவர் செல்வபாண்டியன் வரவேற்றார். இயக்குனர்(பொ)மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பேராசிரியர்கள், குணசேகரன்,
வெங்கட்ராமரெட்டி ஆகியோர் பேசினார்.