ADDED : பிப் 13, 2025 01:32 AM
கொடிகம்பம் அகற்ற அறிவுறுத்தல்
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் தேசிய, மாநில, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில், பல மாதங்களாக தங்களது கட்சி கொடிகளை கட்டி வைத்துள்ளனர். மேலும், அரசு துறைகளுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடிக்கம்பங்களை, 12 வார காலத்திற்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள மதுரை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவின் படி, தர்மபுரி மாவட்டத்தில் தேசிய, மாநில, நகராட்சி மற்றும் பஞ்., களில் பொது இடங்களில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை, 12 வார காலத்திற்க்குள் அகற்ற வேண்டும். இவ்வாறு அகற்ற தவறும் பட்சத்தில் நீதி மன்ற ஆணைப்படி, தொடர் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

