ADDED : பிப் 18, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., செயற்குழு கூட்டம்
தர்மபுரி:தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், அவை தலைவர் செல்வராஜ் தலைமையில் தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பேசுகையில், ''மார்ச், 1ல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஸ்டாலின் தெரிவித்ததை போல் வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில், 200 தொகுதிகளை நாம் கைப்பற்ற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்,'' என்றார்.
இதில், மாநில சட்டத்துறை இணை செயலாளர் தாமரை செல்வன், மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

