/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊருக்குள் புகுந்தசிறுத்தையால் அச்சம்
/
ஊருக்குள் புகுந்தசிறுத்தையால் அச்சம்
ADDED : பிப் 18, 2025 12:45 AM
ஊருக்குள் புகுந்தசிறுத்தையால் அச்சம்
பாலக்கோடு:பாலக்கோடு அருகே, ஊருக்குள் புகுந்து, நாயை கவ்வி சென்ற சிறுத்தையால், -கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, வாழைத்தோட்டம் கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. வனத்தில் இருந்து விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வரும். அப்போது ஆடு, கோழி மற்றும் கால்நடைகளை கொல்வது வழக்கமாக உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் வனத்தை விட்டு வெளியேறிய ஒரு சிறுத்தை, வாழைத்தோட்டம் கிராமத்தில் விவசாயி வினாயகம் வீட்டின் முன்பிருந்த நாயை கவ்விக்கொண்டு, வனப்பகுதிக்கு சென்றது. இது அங்கிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.