ADDED : பிப் 28, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு கல்லுாரியில் கருத்தரங்கு
பென்னாகரம்:பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறையுடன், தேசிய பங்குச் சந்தை நிறுவனம் இணைந்து, கல்வி மூலம் பங்குசந்தை முதலீட்டாளர்களை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், வணிகவியல் துறைத்தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். கருத்தரங்க செயலாளர் கண்ணுச்சாமி  அறிமுக உரையாற்றினார். கோவையை சேர்ந்த பிரபாகரன், பங்குச் சந்தையில் மூலதனத்தை எவ்வாறு பாதுகாப்பாக முதலீடு செய்வது, காலகட்டத்திற்கு தகுந்தார் போல், முதலீடுகளை மாணவ பருவத்தில் மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது பற்றிய வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்தார். முன்னா நன்றி கூறினார்.

