ADDED : பிப் 28, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய அறிவியல் தினம்
தர்மபுரி:தர்மபுரி, பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பில், தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், இயற்பியல் துறை பேராசிரியர் செல்வபாண்டியன் வரவேற்றார். தொடர்ந்து, மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துறைத்தலைவர் குமாரதாஸ் பேசினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்வின் அமைப்பு செயலாளர் பிரசாத் நன்றி கூறினார்.

