ADDED : மார் 09, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்து முன்னணிநிர்வாகிகள் கைது
தர்மபுரி:திண்டுக்கல் மாவட்டம், அபிராமி அம்மன் கோவில் அடியார்கள், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் மற்றும், 80க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் கைது செய்யபட்டனர். இதை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வேடியப்பன், மாவட்ட அமைப்பாளர் வசந்த் தலைமையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டதில் ஈடுபட முயன்ற, 18 பேரை போலீசார் கைது செய்தனர்.