ADDED : மார் 13, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்சோவில் வாலிபர் கைது
ஓசூர்:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித் கர்மாகர், 26. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தன் மனைவியின் உறவினர் மகளான, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் தற்போது சிறுமி ஒன்றரை மாத கர்ப்பமாக உள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் அஜித் கர்மாகரை நேற்று மாலை கைது செய்தனர்.